மகாவிஷ்ணுவின் பெருமைகளை விளக்கும் நுால். வியாச முனிவரால் இயற்றப்பட்ட 18 புராணங்களில் ஒன்று.
மைத்ரேயரின் வேண்டுகோளுக்கிணங்க பராசரர் கூறியதே இந்த புராணம் என விளக்கம் தெரிவிக்கிறது. உலகத் தோற்றம், உயிரினங்களின் பிறப்பு, அரச வம்சங்கள், முனிவர் சிறப்புகள், திருமால் அவதார லீலைகள் போன்ற விபரங்கள் நிரல்படுத்தப்பட்டுள்ளன.
வர்ணாசிரமங்கள் ஏற்பட்ட விதம், பிரம்ம புத்திரர்களின் படைப்பு, ஈரேழு உலகங்கள், சந்திர சூரிய மண்டலங்கள், ஜடபரதர் வரலாறு, வேத சாலைகள், வைணவத்தின் பெருமை, ஆராதனை முறை, ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தின் மகிமை பற்றி விளக்கம் உள்ளது. எல்லாருக்கும் புரியும் வண்ணம் சுருக்கமாக எளிய உரைநடை வடிவில் தரப்பட்டுஉள்ள நுால்.