மனித மனம் சூழ்நிலைக்கு தக்கபடி நிறம் மாறக்கூடியது என காட்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். மனிதர்கள் அணிந்திருக்கும் முகமூடி, குண இயல்புகள், அவலங்களை பேசுகின்றன. அதுவே வாசிப்பில் ஈர்ப்பை அதிகப்படுத்துகிறது. போலி சாமியாரின் தகாத செயலை அழகாகச் சொல்கிறது, ‘இதோ எந்தன் தெய்வம்’ கதை.
ஒவ்வொன்றும் மனித முகங்களுக்கு பின் மறைந்திருக்கும் விகாரத்தை அழுத்தமாய் சொல்கின்றன. விளைவுகளை பற்றி யோசிக்காமல், பேராசையுடன் வலம் வந்து அவஸ்தைப்படுவதை பட்டவர்த்தனமாக பறைசாற்றுகின்றன. தனித்துவமான சிறுகதை தொகுப்பு நுால்.
– பிரபு