மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகத்தில் காணப்படும் மெய்யறிவு குறித்து ஆய்வு நோக்கிலான நுால்.
முதற்பகுதியில், திருவாசகத்தில் 51 பதிகங்கள் வைப்பு முறையையும், அவை ஒன்றன்பின் ஒன்றாகப் பொருந்தி வருவதை அனுபவத்தின் வாயிலாகக் கண்டும், கற்றும் உணர்ந்த செய்திகளை இணைத்து கூறப்பட்டுள்ளது.
இரண்டாம் பகுதியில், திருவாசகத்தில் பொதிந்து கிடக்கும் மெய்யறிவு கருத்துகள் விவரிக்கப்பட்டுள்ளன. கர்மயோகம் பிறவித் தளையை நீக்கி உலகப் பற்றை விட்டொழிக்க உதவுவது போன்ற கருத்துகள் நிறைந்த உவப்பான நுால்.
– புலவர் சு.மதியழகன்