முருகப் பெருமானை நினைந்துருகி நெஞ்சம் நெகிழ்ந்து இன்னிசையால் ஆராதித்துள்ள நுால்.
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் பெருமானைப் பற்றி, 10 பாடல்களும், காஞ்சிபுரம் குமரக்கோட்டத்தில் எழுந்தருளியிருக்கும் குமரனை நினைத்து ஒன்பது பாடல்களும் இயற்றப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பாடலும் பல்லவி, அனுபல்லவி, சரணம் என வகைப்படுத்தப்பட்டு, ‘குடைவரை கோவில் கண்டு குமரன் வாழ்கின்ற குன்றம்... குறைவிலாத வாழ்வு நல்கும் அற்புத தமிழ் மன்றம்...’என புகழ்ந்துரைக்கப்பட்டுள்ளது. மனம் உருகி வேண்டி, இனிய எளிய சந்தநயம் மிக்க சொற்களால் அமைந்துள்ளது. நெஞ்சம் நெகிழ வைக்கிறது. மேன்மை மிக்க பக்தி உணர்வை பெருக்கும் நுால்.
– புலவர் சு.மதியழகன்