தெலுங்கு ஸ்லோகங்களை உள்ளடக்கிய புத்தகம். தமிழ் லிபியில் அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஸ்லோகமும் நான்கு வரிகள். அதற்கான பொழிப்புரை அழகாக தரப்பட்டுள்ளது. பக்தி நெறி போதிக்கும் ஒவ்வொரு பாடலும், ‘ஓ ராமா’ என முடிகிறது. வேமன்ன சுவாமிகள் குப்பை மேடுகளில் புரண்டபடி சொல்லிய பாசுரங்கள் இவை என முன்னுரையில் சொல்லப்பட்டுள்ளது.
சிரசை விட்டு நீக்கப்பட்ட ரோமங்கள் உபயோகப்படாதது போல, புத்தியில் ஆன்மாவை தீட்டாதவன் வாழ்வும் உபயோகம் அற்றதே என்ற கருத்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.