வாழ்வும் அறிவியல் கல்வியும்: ஆசிரியர்: ஆசார்ய மகா பிரக்யா, மொழி பெயர்ப்பாளர்: டாக்டர் மா.கோவிந்தராஜன், வெளியீடு: துளசி மகா பிரக்ய சாகித்ய அகடமி, 34, மணகப்பன் தெரு, சென்னை - 600 079. (பக்கங்கள்: 240, விலை ரூ.70/-)
வாழ வழி காட்டும் சிறந்த நூல். தன்னையே நோக்குதல், தன்னுள் நோக்குதல், தன்னை, தன் மூச்சை, உடலை, சிந்தனையை சீராக்கி, அதன் மூலம் சமூகத்தை சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று மகா பிரக்யா "பிரேக்சா' தியான முறையை அறிமுகப்படுத்தி உள்ளார்.
சிறந்த மூச்சுப் பயிற்சியை "பிரேக்சா' தியான முறை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது.
அண்மையில் மகா பிரக்யாவின் 86வது பிறந்த நாள் விழா, டாக்டர் அப்துல் கலாம் தலைமையில் சான்றோர்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மகா பிரக்யாவின் இந்த நூல் ஒரு ஆன்மிகப் பொக்கிஷம்.