சிறுவர்களின் நினைவாற்றல், நற்குணங்களை வளர்க்க உதவும் நுால். மொத்தம், 100 தலைப்புகளில் படைக்கப்பட்டு உள்ளது. மாட்டின் புத்திசாலித்தனத்தை, ‘எருதும் விவசாயியும்’ கதை உணர்த்துகிறது. பேராசையால் ஏற்படும் இழப்பை, ‘போதுமென்ற மனமே’ கதை புரிய வைக்கிறது. தந்தைக்கு காட்டும் கண்டிப்பை தன் மகன் தனக்கும் காட்டுவான் என்பதை, ‘யுத்தி பலித்தது’ கதை சொல்கிறது.
குடிகாரரை திருத்திய ஞானியின் சமயோசிதத்தை, ‘திருந்த வழி’ கதை யோசிக்க வைக்கிறது. திருடியவரை கண்டுபிடிக்க, குறுக்கு விசாரணையில் கையாண்ட நீதிபதியின் செயல் பேச வைக்கிறது. சிறுவனின் புத்திசாலித்தனத்தை ‘அறிவுள்ள சிறுவன்’ கதை சிந்தனையை வரவழைக்கிறது.
ஒவ்வொரு கதைகளும் செயலின் வடிவத்தை கூறி சிந்தனையை துாண்டுகின்றன. கதையுடன் சேர்க்கப்பட்ட ஓவியம் வாசிப்பை துாண்டுகிறது. பெற்றோர், மாணவ – மாணவியர் வாசிக்க வேண்டிய நுால்.
– டி.எஸ்.ராயன்