தீமைக்கும் அன்பிற்கும் இடையே நடக்கும் போரில் அன்பு தன் வெற்றியை உறுதியாக நிலைநாட்டும் என்பதை விளக்கும் அற்புதமான கதை. மொத்தக் கதையும் ஒரு முதியோர் இல்லத்தில் நடக்கிறது. நாயகன் சேது, நாயகி ஸ்வேதா அழகாகச் செதுக்கப்பட்ட பாத்திரங்கள். கதையில் அன்பு மெய் சிலிர்க்க வைக்கிறது.
முதியோர் இல்லம் பற்றிய சரியான பார்வையை எளிமையான வார்த்தைகளில் தந்தது அருமை. முதியோர் இல்லம் ஆதரவற்ற முதியோர்களுக்கான அனாதை இல்லம் அல்ல; இளமையில் ஓடி களைத்த நதிகள், ஓய்வுக்காலத்தில் அன்பைப் பரிமாறிக்கொள்ள சங்கமிக்கும் புனிதமான கடல் என்பதை காட்டுகிறது.
ஒரு காலத்தில் பாலியல் தொழிலில் இருந்த பாத்திரம் வித்தியாசமான படைப்பு. சொந்த மகளையே பலி கொடுத்து தர்மத்தை நிலைநிறுத்திய விதம் மனதைப் பிசைகிறது. எடுத்த புத்தகத்தைக் கீழே வைக்கவிடாத விறுவிறுப்பு நுாலின் மற்றொரு சிறப்பம்சம்.
–
செல்வி நேத்ரா