விநாயகர் அருள் இருப்பவர்களுக்கு எல்லா இடங்களிலும் எப்போதும் முதலிடம் தான்; தருமத்தை ஒருநாளும் அளக்க முடியாது; எவன் ஒருவன் தன்னை அறிந்து கொள்ளவில்லையோ அவன் மனிதன் இல்லை.
ஒருவன் பிறந்த குலத்தையும் தோற்றத்தையும் கண்டு எடை போடக் கூடாது. ஞானத்தைக் கொண்டே மதிப்பிட வேண்டும். இது போன்ற அரிய தத்துவங்களை எளிமையாக சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்ட அறுபத்து மூன்று சிறுகதைகள் அடங்கிய தொகுப்புதான் இந்த ஆன்மிக சிறுகதைகள்.
சிறு வயதில் பெரியவர்கள் சொன்ன கதைகளையும் மற்றவர்களிடம் கேட்ட கதைகளையும், மேலும் அந்த கதாபாத்திரங்களை கண்முன்னே நடந்தது நடப்பது மாதிரி தொகுத்து வழங்கி உள்ளார். சுவாரஸ்யமான விஷயங்களைக் கொண்ட சிறுகதைகள். பெரியவர்களும் படித்து மகிழலாம்.
–
இளங்கோவன்