வானொலியில் ஒலிபரப்பான சிறுகதைகளின் தொகுப்பு நுால். வித்தியாசமாக வடிவமைக்கப் பட்டுள்ளது. கால இடைவெளியை தாண்டி உயிர்ப்புடன் இருக்கிறது.
தாய்க்கும், மனைவிக்கும் இடையில் திண்டாடுபவனின் கதை சலனம் தருகிறது. காதலித்தவன் பல ஆண்டுகளுக்குப் பின் பக்கத்து வீட்டுக்கு குடிவந்த போது, கதை நாயகியின் மனப் போராட்டத்தை சித்தரிக்கிறது.
திருமணத்திற்கு பின் வேலை பார்க்க பெண் விரும்பியதால், மாப்பிள்ளை குடும்பம் ஏற்க ஒப்புக் கொள்ளவில்லை. ஐந்து ஆண்டுகளுக்குப் பின், அதே பெண்ணை விதவையாக குழந்தையுடன் சந்திக்கும் அந்த வாலிபனின் மனதில் ஏற்படும் கிளர்ச்சியை கூறுகிறது.
ஜெயிலர் மற்றும் கைதி குணச்சித்திரம் ஒரு கதையில் காட்டப்பட்டுள்ளது.
– சீத்தலைச் சாத்தன்