மதுரையில் செவந்தீஸ்வரர் கோவில் வரலாற்றை பதிவு செய்துள்ள நுால். அவனி நாராயண சதுர்வேதிமங்கலம் என அறியப்பட்டு, ‘அவனியாபுரம்’ என ஊர் பெயர் மாறியதை தெரிவிக்கிறது. கோவில் கட்டடக்கலையின் சிறப்பு, கல்வெட்டு செய்திகள் தரும் வரலாற்று குறிப்பு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் கோவில் பற்றிய விபரமும் உள்ளது.
மீனாட்சி, குழந்தை பருவத்தில் தோழியுடன் விளையாடிய இடமாக குறிப்பிடுகிறது. இன்று ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெறும் இடமாக சிறப்புகளை கொண்டுள்ளது அவனியாபுரம். செவந்தீஸ்வரர் கோவில் பற்றிய செவிவழிச் செய்திகளும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அரிய புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ள நுால்.
-– சிவா