சித்தர்கள் இந்த உலகுக்கு அளித்துவிட்டுப்போன சீர்வரிசை தீட்சையாகும்.
தீட்சை என்பதும் ஒருவகையில் கடத்தல்தான்! தான் பெற்ற ஞானத்தை பிறருக்குக் கடத்துவது!
ஆமாம்! சித்தர்கள் தாங்கள் பெற்ற ஞானத்தை தங்களது சீடர்களுக்கும் பிறருக்கும் கடத்தினார்கள்.
ஞானத்தை எப்படிக் கடத்துவது? ஒலிபெருக்கியின் உதவியோடு செய்யும் பிரசாரம் இதற்கு உதவாது. இரண்டு ஆன்மாக்களும் பேசிக்கொள்ளும் நேரடி நிகழ்ச்சியாக அது இருக்க வேண்டும்.
இந்நூலைப் படித்து முடித்தபிறகு உங்களது உணர்வு இப்படித்தான் இருக்கமுடியும்!
ஆழமான கருத்துகள்; அழகான சொற்கள்; அருவி போன்ற துள்ளல் நடை!