பல்வேறு சிந்தனைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். ஈரான் – ஈராக் யுத்தம் அமெரிக்க தலையீட்டை பற்றிய கருத்து கூறப்பட்டுள்ளது.
மறைந்த சதாம் உசேன் திருமண நிச்சயம், தலைமறைவு வாழ்க்கை பற்றிய தகவல்களை தருகிறது. மதம் என்பது கத்தி மாதிரி; பயன்படுத்தும் முறையில் மனிதனை பதம் பார்த்து விடும் என்கிறது. அபூர்வ கருத்துகள் கேள்வி – பதிலாக கட்டுரை முழுதும் விரவிக் கிடக்கின்றன.
காஷ்மீர் ஷேக் அப்துல்லா, கொடைக்கானலில் வீட்டுச்சிறையில் இருந்த விபரங்கள் சொல்லப்பட்டுள்ளன. அன்னை தெரசாவை --டயானாவுடன் ஒப்பிட்டு, சந்திப்பு பற்றியும் சொல்லப்பட்டுள்ளது. பனியன் நகரம் கட்டுரை வித்தியாசமானது. ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாத கட்டுரைகளின் தொகுப்பு நுால்.
– சீத்தலைச்சாத்தன்