காதலை மையமாகக் கொண்டு வெளிவந்துள்ள கதை நுால். கண்டதும் காதல், காணாமல் காதல், ஒருதலைக் காதல் என எத்தனை கதைகள் வந்தாலும், மானிடருக்கு காதல் அலுத்துப் போவதே இல்லை. இயற்கையின் பெருங்கொடை காதல். அதை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.
அன்பு, பரிவு, பாசம் இல்லாத குடும்பங்கள் தான் மலட்டுத் தன்மையுள்ளவை. குழந்தைப் பேறு இல்லாத பெண்ணுக்கு அந்த பெயர் இல்லை என்பதை உணர்த்துகிறது. ஆண், பெண் இருவரும் சமமான உயிரினம் என்றும், ஆண், பெண்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும் விரிவாக எழுதப்பட்டுள்ளது.
மொழிநுட்பம், வட்டார வழக்கு சொற்கள் பயன்படுத்தியிருப்பது போன்ற செயல்கள் பாராட்டுக்குரியனவாக உள்ளன.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்