ஒரு நாவல் மற்றும் 12 சிறுகதைகள் அடங்கிய புத்தகம். புத்தகத் தலைப்பில் உள்ளே ஒரு கதையும் இல்லை. சின்ன சின்ன சம்பவங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லை என்றாலும், அடுத்த வீட்டு ஜன்னலை எட்டிப் பார்த்த மாதிரி உள்ளது. எளிய நடை, ‘டிவி’ சீரியல்களில் சதி பண்ணும் பெண்களைப் பார்ப்பதற்காக ஏன் உட்காருகின்றனர் என்பது நல்ல கேள்வி.
இன்றைய இளைஞன் தன் வீட்டில் நடப்பது என்ன என்று அறிவதை விட, நடிகன் வீட்டில் என்ன நடக்கிறது என்பதே முக்கியமாக படுகிறது. அமெரிக்க வாழ்வின் அவலத்தை தோலுரித்து காட்டுகிறது.
பொறுமையாக முயன்று சாதித்து, மற்றவரை தலைகுனிய வைக்க வேண்டும் என்பது போன்ற நல்ல நீதிகளை புகட்டும் நுால்.
– சீத்தலைச் சாத்தன்