Gandhi Study Centre, 58, Venkatnarayana Road, T.Nagar. Chennai- 17. (pages : 104)
சென்னை பி.எஸ்., அறக்கட்டளை நிர்வாகிகளும் காந்தி கல்வி நிலையத்தின் செயலாளர். டாக்டர் ச.பாண்டியனும் இணைந்து மேற்கொண்ட பெருமுயற்சியில் பலர் வாழ்வைத் திறந்த புத்தகமாக்கிய மகாத்மா காந்தியின் வாழ்வில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகள் இந்த நூலில் இடம் பெற்றிருக்கின்றன.
காந்தி பள்ளியில் படிக்கும் போது வயதுச் சான்றிதழில் மோகன் தாஸ் கரம்சந்த் என்பதற்கு பதிலாக மோனாதாஸ் என்றிருக்கிறது. காரணம் என்ன? (பக்கம் 13ல் படத்துடன் விளக்கம் காணலாம்).
தாய்க்கு அளித்த உறுதிமொழிப்படி லண்டனில் அவர் சைவ உணவகம் தேடிக் கண்டுபிடித்த மகிழ்ச்சி, ஜோகன்னஸ்பர்க்கில் கோட், சூட்டு சகிதமாக அவர் வாழ்ந்ததைப் படத்துடன் கண்டுகளிக்கலாம். சென்னையில் தலைசிறந்த சுதந்திரப் போராட்டத் தலைவர் சீனிவாச அய்யங்காருடன் சந்திப்பு, சென்னைக் கடற்கரையில் பேசியது ஆகியவை நம்மை அவர் காலத்திற்கு இட்டுச் செல்லும் தகவல்கள்.
காந்திஜியை நமக்கு அடையாளம் காட்டும் அவர் சொத்துக்கள் எவை என்பதைக் கடைசிப் படமாக அமைத்து அதற்கு எழுதப்பட்ட ஆங்கில தமிழ் விளக்கங்கள் காந்திஜியின் நினைவுகளைப் பசுமையாக்குகிறது. சிறந்த அச்சு, வரலாற்றைப் பேசும் கறுப்பு வண்ண போட்டோக்கள், நல்ல கட்டமைப்பு, ஆங்கிலம் தமிழ் ஆகிய இரு மொழிகளில் எளிய விளக்கம் ஆகியவை இப்புத்தகத்தை பொக்கிஷமாக்குகின்றது.