கண்ணதாசன் பதிப்பகம், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 248)
பிரபல நாடக எழுத்தாளரான விக்டர் தனது மனைவி, குழந்தை, வேலைக்காரன் மற்றும் நாயுடன் பண்ணை வீட்டில் தங்கி தனது அடுத்த படைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.ஒரு நாள் காலை விக்டர் எழுந்து பார்த்தபோது வேலைக்காரனையும், நாயையும், துப்பாக்கிகளையும் காணவில்லை. தொலைபேசி வேலை செய்யவில்லை. காரின் ஸ்பார்க் பிளக்குகளும் காணவில்லை. ஜேம்ஸ் ஹாட்லி சேஸின் மர்ம நாவலின் ஆரம்பமே இப்படி நெஞ்சை உறைய வைக்கிறது. நூலைப் படித்து முடித்து விட்டுத்தான் கீழே வைக்கத் தோன்றும்.மர்ம நாவல் பிரியர்களுக்கு தமிழில் ஜேம்ஸ் ஹார்ட் சேஸின் நாவல்களைப் படிக்கும் வாய்ப்பை கண்ணதாசன் பதிப்பகம் ஏற்படுத்தித் தந்துள்ளது பாராட்டத்தக்கது.