ஐந்து எழுத்தையும், அதன் சிறப்பையும் அற்புதமாக விளக்கும் நுால். தமிழ் எழுத்தையும், எண்ணையும் குறிப்பிடும் மர்ம எண் முறையை தெளிவாக தந்து விளக்குகிறது.
மனித உடலில் மூலாதாரம் துவங்கி ஐந்து எழுத்து செயல்படுத்தும் முறையை தெரிவிக்கிறது. ‘நமசிவாய’ மந்திரத்தை திருமூலர் திருமந்திரத்தின் வழி விளக்கிச் சொல்கிறது. ஸ்துால பஞ்சாட்சரம், சூக்கும பஞ்சாட்சரம், அதிசூக்கும பஞ்சாட்சரம் என்று விளங்கும் நிலையை விரிவாக எடுத்துரைக்கிறது.
ஐங்கோண கணக்கு என்பது பஞ்சாட்சரம் என விவரிக்கிறது. ஐந்து எழுத்து மந்திரத்தை உடலில் பொருந்தி விளக்கம் தருகிறது. வாழ்வு தத்துவத்தை ஐந்து என்ற எண் வழியாக விளக்கம் தரும் நுால்.
– புலவர் ரா.நாராயணன்