முதியோர் நல்வாழ்வுக்கு உரிய தகவல்களை தரும் நுால். கால ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்களை தெளிவாக்குகிறது. முதுமை என்பது நெடிய வாழ்வு பயணத்தின் இறுதி நிலை என்பதை உணர்த்துகிறது.
இந்த புத்தகத்தில், 10 தலைப்புகளில் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. முதுமை என்பது வரம் என துவங்குகிறது. முதுமையின் சிறப்புகளை பல கோணங்களில் எடுத்துரைக்கிறது. முதுமையை போற்றுவதில் சமூகத்தில் உள்ள குறைகளையும் எடுத்துரைக்கிறது.
முதுமை பருவத்தில் ஆரோக்கியமாக வாழும் வழிமுறைகளை காட்டுகிறது. முதுமை பருவத்தில் செய்து கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை, குடும்பத்தினருக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை குறிப்பிடுகிறது. முதுமைப் பருவத்தை மகிழ்ச்சியுடன் வாழ வழிகாட்டும் நுால்.
– மதி