கீழக்கரை வாழ்வையும், பண்பாட்டையும் விளக்கும் நுால். வள்ளல் சீதக்காதிக்கு மேலும் சிறப்பு செய்வதாக உள்ளது.
இஸ்லாமியர் ஸபர் மாதத்தில் கொண்டாடும், ஒடுக்கத்து புதன் பற்றிய தகவல்கள் விரிவாக கூறப்பட்டுள்ளன. கீழக்கரையில் பிரபலமான, ‘மாசி’யைப் பற்றிய தகவல்களை அறியத்தருகிறது. சேது எக்ஸ்பிரஸ் ரயில் பயணம் பற்றிய தகவல் நினைவுகளை அசைபோட வைக்கும்.
அந்தக் கால உணவகங்களை பற்றிய செய்திகளையும், பிரபலமான உணவுகளையும், சில உணவு தயாரிப்பு முறைகளையும் விவரிக்கிறது. கலங்கரை விளக்கம், பள்ளிகள், நவதானிய தின்பண்டம், சினிமா தியேட்டர்கள், சக்கரக்கோட்டை கண்மாய் குளியல் தகவல்களும் இடம் பெற்றுள்ளன. கீழக்கரை பற்றிய தகவல்கள் உடைய நுால்.
– முகில்குமரன்