பெண்கள் வாழ்வை மையப்படுத்திய கட்டுரைகளின் தொகுப்பு நுால்.
நடப்பவை எல்லாம் இயல்பு என எண்ணுவதில் ஒளிந்திருக்கும் ஆணாதிக்க சிந்தனையை வெளிப்படுத்துகிறது. மனைவியிடம் அன்பை தேடும்போது கிடைக்கும் ஆனந்தம் பற்றி பகிர்கிறது. உருவக்கேலி செய்வோரை சாட்டையால் அடிக்கிறது. துரித உணவு நடைமுறையால் ஏற்படும் நோய், சோம்பல், உடல் பருமன் குறித்து எச்சரிக்கிறது.
சமையலறையுடன் பெண்களின் வாழ்க்கை முடிந்து விடுகிறதா என்ற கேள்வியை முன் வைக்கிறது. பள்ளிகளில் சுகாதாரமில்லாத கழிப்பறையால், பெண்கள் வாழ்நாள் முழுதும் படும் இன்னல்களை பட்டியலிடுகிறது. ஆண்களுக்கு கிடைக்கும் சுதந்திரம் ஏன் பெண்களுக்கு கிடைப்பதில்லை என ஆராய்கிறது. பெண்களுக்கு மதிப்பளிப்பதை வலியுறுத்தும் நுால்.
– டி.எஸ்.ராயன்