அன்பு நிறைந்திருக்கும் உள்ளத்தில் நிலையான ஆனந்தம் கிடைக்கும் என்பதை எடுத்துரைக்கும் நாவல் நுால்.
வாழ்வின் வழியே இல்லாதது போல் தோன்றினாலும், இறை அன்பு ஏற்படுத்தி தரும் என நம்பிக்கை விதைக்கிறது. துன்பங்கள் மீதான அணுகுமுறையை முற்றிலும் திருப்பி போடும் வகையில் அமைந்திருந்தது. மற்றவர்களை போல் சாதாரண வாழ்க்கை அமையவில்லை எனில், மகத்தான பணி காத்திருக்கும் என நிரூபணம் செய்கிறது.
துவக்கத்தில் இருந்தே தன்னலத்தை புறந்தள்ளி, பிறருக்காக செயல்பட தயார் நிலையில் உள்ள கதாபாத்திரங்கள் மனதை உருகச் செய்கின்றன. தாய்மை என்பது முற்றிலும் மனதை சார்ந்த உணர்வு என்ற தெளிவை ஏற்படுத்துகிறது. அனுபவித்து படிக்க வேண்டிய அற்புத நுால்.
– தி.க.நேத்ரா