தாய் – மகள் இடையே பாசப்பிணைப்புக்கு வரையறை வகுத்துத் தரும் நாவல். காதல் என்பது விரும்பத்தகாத ஒன்றாக அடக்கப்படுவதற்கான காரணத்தை அலசி ஆராய்ந்து, உரிய தீர்வை முன் வைக்கிறது.
இளம்பெண்களுக்கு ஏற்படும் இனக்கவர்ச்சியால், காதலை பிரித்தறிய முடியாத நிலை ஏற்படுகிறது. இதற்கு பின்னணியில் உள்ள சூழலை தெளிவாக அணுகி ஆய்வு செய்து கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
சகஜமான விஷயம் கூட, அளவற்ற அன்பாலும், தேவையற்ற பயத்தாலும் அடக்குமுறையாக ஆவேசமாக உருவெடுக்கிறது. அது பூகம்பமாய் வெடித்துச் சிதறி வாழ்வை பாழடிக்கிறது. தாயின் அளவற்ற பாசத்தால்கூட இதுபோன்ற நிலை ஏற்படலாம் என்பதை தெளிவுபடுத்துகிறது. இளமை நிறைந்த காவியமாய் மலர்ந்துள்ள நாவல்.
– ராம்