அகத்தில் அன்பு இருந்தால் வாழ்க்கை தவமாக மாறிவிடும் என்ற சாராம்சத்தை உள்ளடக்கிய நுால்.
அழகு, செல்வம், புகழ் கடந்து அன்பே பிரதானம் என்று நடிகை உரக்கக் கூறுவது மாற்றம் ஏற்படுத்தும். வலி, வேதனைகளை அனுபவித்த பின், பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் என்றெண்ணும் தெய்வீக உள்ளத்தை படம் பிடிக்கிறது. மன உணர்வுகள் தான் நன்மை-, தீமையை ஈர்க்கிறது என்ற கருத்தும் புதிய கண்ணோட்டம் தருகிறது.
யதார்த்தத்தை வெல்லும் தருணங்கள் எல்லாம் கடவுள் மீதான நம்பிக்கையை பலப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. மனிதர்கள் இறைவனிடம் செய்யும் பிரார்த்தனைகளில் உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டி புரிதலையும் மேம்படுத்துகிறது. புதிய சிந்தனை தரும் நுால்.
– தி.க.நேத்ரா