செல்வம் சேர்ப்பதற்கு வழிமுறைகளை தெரிவிக்கும் நுால். பழங்கால பண்பாட்டில் பின்பற்றப்பட்ட வழிமுறைகளை எடுத்துரைக்கிறது. டிஜிட்டல் கிராபிக்ஸ் நுட்பத்தில் படக்கதையாக உருவாக்கப்பட்டுள்ளது.
உலக அதிசயங்களில் ஒன்றாக புகழ்பெற்றது பாபிலோன் நகர தொங்கும் தோட்டம். வரலாற்றில் இந்த நகரம் செழிப்பாக விளங்கியது. இதற்கு உரிய காரணங்களை அலசி படக்கதை வடிவில் தருகிறது. பணம் சேர்க்க பின்பற்றிய விதிகளும் உள்ளன.
செல்வம் சேர்த்த விதம், வியாபார நடைமுறை எளிமையாகக் கூறப்பட்டுள்ளது. டிஜிட்டல் கிராபிக்ஸ் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. பண்டையகாலத்தில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த நுட்பத்தை பாமரர்களும் அறிய தகும் நுால்.
– மதி