மகாபாரதம் காப்பியத்தை சுருக்கமாக தரும் நுால். கதாபாத்திரங்களையும் மிகவும் தெளிவாக அறிமுகப்படுத்துகிறது.
பங்காளிச் சண்டையால் பகையாளியானதால் வள்ளல் கர்ணன், பாண்டு மனைவி குந்தி தேவியின் மகனாக இருந்தாலும் துரியோதனன் பக்கம் நிற்கிறான். தர்மம் ஜெயிக்க கண்ணன் பரமாத்மா, பாண்டவர்கள் பக்கம் நிற்கிறார். சிகண்டி, ஆதியில் பெண் என்பதை தெரிந்து பீஷ்மர் தாக்காத தர்மத்தால் தலை சாய்கிறது. இடையிடையே பிறவிகளின் படங்கள் ஜொலிக்கின்றன. விதுரன் அரக்கு மாளிகைக்கு சுரங்கம் கட்டியது அறிவு நேர்த்தியை சொல்கிறது.
அறிவு ஞானம் அடையாதவன் வயதால்மட்டும் உயர்ந்தவன் ஆக மாட்டான். தைரியமே துணை. புல்லினும் அற்பமானது தேவையில்லாத கவலைகள் போன்ற கருத்துக்கள் மிளிரும் நுால்.
– சீத்தலைச் சாத்தன்