நிவேதிதா பதிப்பகம், 1, மூன்றாம் தளம், புதூர் 13வது தெரு, அசோக் நகர், சென்னை83. (பக்கம்: 110. விலை: ரூ.45).
வாழ்க்கைப் போராட்டங்களும், வர்க்கப் போராட்டங்களும் எவ்வாறு மார்க்சியத்தை மலர வைக்கிறது என்று புதுக்கவிதையால் புரிய வைக்கிறார் ஆசிரியர்.
வால்ட்விட்மன், செயின்ட் சீமோன், கார்ல்மாக்ஸ், பிரடரிக் எங்கல்ஸ், கதே, எங்கெல்ஸ் போன்ற மேல்நாட்டு எழுத்தாளர்களையும், முதலாளித்துவ உலக நாடுகளின் போராட்டத்தையும், மையமாக ஆக்கி, சிவப்பு வண்ணத்தில் இந்த நூலை, புதுக்கவிதைத் திறனாய்வு என்ற பெயரில் எழுதியுள்ளார். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலையாகி நிற்கும் தமிழகத்தின் கவிதை வேர்களை, சுத்தியால் தட்டி, அரிவாளால் வெட்டி, உலகப் புரட்சிகளை இங்கே புதிதாகப் பதியனிட முயலும் செந்நூல் இது!