வள்ளி சுந்தர் பதிப்பகம், ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 320).
தமிழக எழுத்துலகில் சிறந்த எழுத்தாளர்களில் இன்றைக்கு அதிகமாகப் பேசப்படுகின்ற யதார்த்தமான படைப்பாளி அசோக மித்திரன். அவரே மனித நேயத் திற்கு ஒரு எடுத்துக்காட்டு. அதன் பிரதிபலிப்பு தான் அவரது அனைத்து படைப்புகளின் கதாபாத்திரங்களிலும் ஊடாடி நிற்கிறது. அந்த மனித உணர்வுகளை வார்ப்பாக வடித்து தனியே கருவாக வைத்து தனது முனைவர் ஆய்வேட்டிற்கு உருப்பொருளாய் தேர்ந்தெடுத்துள்ளார் ஆசிரியர் முனைவர் அ.அந்தோணி குருசு. அவரது ஆய்வுப் படைப்பை நூலாகத் தந்துள்ளார் வள்ளி சுந்தர் பதிப்பகத்தார். அணிந்துரை நல்கிய முனைவர் ராம குருநாதன் பாராட்டியது போல, தரவும் தகவும், தகுதிமிக்க ஆய்வுப் பதிவுகள், இலக்கிய ஆய்வாளர்களுக்கு வெகுவாய்த் துணை நிற்கும் இந்நூல்.