வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 112)
வரலாற்றுப் புதினங்களைப் படைத்து, தமிழ் இலக்கிய உலகில் அரும் பெரும் சாதனையாளராக திகழ்ந்த மாமேதை அமரர் கல்கி. 60, 70 ஆண்டுகளுக்கும் முன்னர் ஆனந்த விகடன், கல்கி வார இதழ்களில் பெண்ணுரிமைக்கு உரத்த குரல் கொடுத்தது மட்டுமின்றி, அவர்களுக்கு சமூகத்தில் உரியதோர் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்றும் வாதிட்டு வந்தார். எட்டு கட்டுரைகளை உள்ளடக்கிய இந்நூலில் தீவிரமான உட்பொருளை நளினமாக உணர்த்தும் பொருட்டு, நகைச்சுவையுடன் இணை(ழை)த்து, மிளிர வைத்திருப்பது அவரது எழுத்தோவியங்களின் தனிப் பெருஞ்சிறப்பு! (உதாரணம்) பொன்னும், பொருளும் துச்சமென்னும், பெண்களின் கண்ணீர் நீடு வாழப் பிரார்த்திக்கும் அவரது கூற்று.
"என்னுடைய உலகில் பெண்களின் கண்ணீர் இல்லாமல் மட்டும் செய்து விடாதே! பிறகு இந்தப் பாலைவனத்தில் என்னால் ஒரு கணமும் வாழ முடியாது' பெண்ணுரிமையைப் போற்றிப் பேணுபவர்களின் கரங்களில் தவழட்டும் இந்நூல்.