வேங்கடம் 10/இ55, மூன்றாம் குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர், திருவான்மியூர், சென்னை-41. (பக்கம் 144).
"உழைப்பின் பயனை விட உழைப்பே இன்பமாக இருக்கிறது. வெற்றியை விட வெற்றி பெறுவதற்காக நடைபெறும் போராட்டமே இன்பமாக இருக்கிறது' என்னும் எட்மண்ட் பர்க்கின் சிந்தனையை "உழைப்பு' கட்டுரையிலும், ஒருபக்கம் எழுதி தூக்கி எறியப்பட்ட தாள்களை கணிதமேதை இராமானுஜம் எவ்வாறு பயன்படுத்தினார் என்பதை "சேமிப்பு' கட்டுரையிலும், "உழவர் மகன்' தூங்கிப் பழக்கப்பட்டவன் என்று "மன்னிப்பு' அளித்த ஆபிரகாம் லிங்கன் பெருமையை "மன்னிப்பு' கட்டுரையிலும், "நகைக்க முடியாதவன் துரோகம், தந்திரம், திருட்டு முதலியன செய்யத் தகுந்தவன்' என மனிதரை எடை போட்ட கார்லைவ் சிந்தனையைச் "சிரிப்பு' கட்டுரையிலும், "சான்சன் பாசுவெல் நட்பை விட ஒருபடி மேலானதுகோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் நட்பு' என "நட்பு' கட்டுரையிலும், பாரதிப் பெரும்புலவன் ஒருவனே கற்பெனக் பேசிடில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம் என்ற புதுமையைப் புகுத்தினான் என "கற்பு' கட்டுரையிலும் விவரித்துள்ள நூலாசிரியரின் "பொறுப்பு' சமுதாயப் பொறுப்புணர்வுள்ள கட்டுரை. மாணவர்களுக்குப் பயனுள்ள நல்ல நூல் இது.