கங்கை புத்தக நிலையம், 23/13, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 158)
இந்நூல் ஆசிரியர் ஓம் சக்தி பத்திரிகையில் மாதந்தோறும் கோவில் கட்டுரைகளை எழுதியிருப்பவர், கர்நாடக மாநிலத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற கோவில்களை குறித்த நல்ல தகவல்களை இந்நூலில் சிறப்பாக அளித்துள்ளார். நமது இந்திய ஆன்மிகம் உலகமயமாகி இருக்கும் உன்னதத்தை `அமெரிக்காவில் இந்து கோவில்கள்' என்ற கட்டுரையில் அழகாக வெளிப்படுத்திக் காட்டியுள்ளார். `விஜய நகரத்தின் எச்சங்களும், திருக்கோவில்களின் மிச்சங்களும்' பேளுர் ஹோய்சாளர்களின் கலைப் பணிகள், பெங்களூர், ஷ்ரீரங்கபட்டினம், பகவத்பாதர் அவதரித்த புண்ணியபூமி, இஸ்கான் கிருஷ்ணர் கோவில், சிங்கப்பூர், அமெரிக்கா இந்து கோவில்கள், ராஜஸ்தான் மற்றும் பல தெய்வீக ஸ்தலங்களின் சிறப்பையும் விவரித்து எழுதியுள்ளார். கர்நாடக கோவில்களின் வரலாற்று பின்னணி அமைவிடம், சிறப்பியல்புகள், சென்று வரும் வழிமுறைகள் ஆகிய அனைத்தையும் இந்நூலின் வாயிலாக அறியலாம். நல்ல தொகுப்பு