(பாகம்-1 மற்றும் 2): வைதிகஷ்ரீ, புது எண்.488. பழைய எண்.175. டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை-18. (பக்: 102, முதல் பாகம்- விலை: ரூ.50. இரண்டாவது பாகம் - விலை: ரூ.50).
ஆசார - அனுஷ்டான தர்ம முறைகளை பின்பற்றுவதே மனித இனத்திற்கும், மற்ற உயிர் இனத்துக்கும் உள்ள வேறுபாடு.
சில விஷயங்களை தலைமுறை தலைமுறையாக பின்பற்றுவதால் `ஏன்' என்று அறியாமலும் தெளிவில்லாமலும் பலரால் பின்பற்றப்பட்டு வருகின்றன.
வேத சாஸ்திர சிஷ்டாசார அடிப்படையில் வினா- விடை முறையில் பல விஷயங்கள் இந்த இரு பகுதிகளிலும் இடம் பெற்றுள்ளன.
தெய்வ வழிபாடு, பூஜை, ஹோமம், மந்திரங்கள், ஆலயம், பெண்கள், ஆண்கள், சந்தியா வந்தனம், ஜோதிடம், மங்கள நிகழ்ச்சிகள் என்ற 10 தலைப்புகளில் 63 கேள்விகளும், அவற்றுக்கான விடைகளும் முதல் பகுதிகளில் இடம் பெற்றுள்ளன.
ஆலய வலம் (பக்.32), கணவன் பெயரைச் சொல்லி மனைவி அழைத்தல் (பக்.49), சுவாதி நட்சத்திரத்தில் திருமணம் (பக். 88) போன்ற பகுதிகள், ஆசார அனுஷ்டானத்தைப் பேணுவோருக்கு அருமையானவை.
சில கேள்விகளுக்குச் சுருக்கமாகவும், சில கேள்விகளுக்கு விளக்கமாகவும் பதில்கள் தரப்பட்டுள்ளன.
இரண்டாம் பாகத்தில் நீத்தாரை தென்
புலத்தார் என தெய்வங்களுக்கு அடுத்து வைத்து வழிபடுவது மரபு. இவர்களுக்கு அடுத்த தலை
முறையினர் ஆற்ற வேண்டிய கடமைகள் சில விளக்கப்பட்டிருக்கின்றன.
அவ்வரிசையில் தர்ப்பணம், திவசம்,நாந்தி
திவசம், இறுதி ஈமக்கடன்கள் பொதுவான ஐயப்பாடுகள், பரிகாரங்கள் என பட்டியல் படுத்தி 67 வினா - விடைகளை இரண்டாவது பாகத்தில் ஆசிரியர் வழங்கியுள்ளார்.
தர்ப்பண காலம் (பக்.2) ஷண்ணவதி தர்ப்
பணம் (பக்.10), மஹாளய பட்ச தர்ப்பணம் (பக்.15), சிந்தனையோடு தர்ப்பணம் செய்
பவர்கள் அறிந்து கொள்ள வேண்டியவை.
திவசத்திற்கு பதிலாக ஏழைகளுக்கு அன்ன
தானம் செய்வது சரியா (பக்.29) என்பதற்கு மிக அழகான விளக்கத்தைத் தந்துள்ளார் ஆசிரியர்.
பொருள் அறியாமல் இயற்றப்படும் செயலின்பால் ஆசிரியரின் விளக்கம் சிந்தனையை ஏற்படுத்துகிறது.