முகப்பு » ஆன்மிகம் » THE YOGA OF SIDDHA TIRUMULAR:

THE YOGA OF SIDDHA TIRUMULAR:

விலைரூ.550

ஆசிரியர் : டி.என்.கணபதி

வெளியீடு: பாபாஜின் கிரியா ஜோகா

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
T.N.GANAPATHY & K.R.ARUMUGAM. BABAJ'S KRIYA JOGA AND PUBLICATIONS, ETIENNE DE BOLTON. QUEBEE. CANADA. (Page: 533. DADAJI KRIYA YOGA, ADAJI

DADAJI KRIYA YOGA, P.O.BOX 5608, malleswar am, BANGALORE 560055/ PW:080 23560252.

யோகம் - தியானம் - உடற்பயிற்சி போன்ற துறைகள் சார்ந்த செய்திகள் இன்றைக்கு ஆன்மிக உலகிலும் அதற்கு வெளியிலேயும் உலகம் தழுவிய நிலையில் பேசப்படுகின்றன; ஆராயப்படுகின்றன; பயிற்றுவிக்கப்படுகின்றன. மேற்கத்திய நாடுகளின் பார்வை நமது புராதனச் சித்தர்களது சிந்தனைகளிலேயும், செயல் வடிவங்களிலேயும் பதிந்திருக்கின்றன. இச்செய்திகளுக்கெல்லாம் மூலக் கருவாக உள்ளவர், தமிழ் மண்ணில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சித்தர் திருமூலர். பத்து ஆய்வுக் கட்டுரைகளில் ஆறு முனைவர் டி.என்.கணபதியும், நான்கு கே.ஆர்.ஆறுமுகமும் எழுதி பதிவு செய்துள்ளனர். திருமூலரது திருமந்திரம் ஒரு ஞானச் சுரங்கம். காலந்தோறும் காண்போர் நோக்கில், பல பொருள் புலப்படுத்தக்கூடிய மந்திரச் சொற்கள் நிறைந்த சித்தா இலக்கியம், சைவ சித்தாந்தத்தின் திறவுகோல் திருமந்திரம்.
`மூலன் உரை செய்த மூவாயிரந் தமிழ் ஞாலம் அறியவே நந்தி அருளது' என்ற திருமூலரது வாக்கைப் போல; 3000 பாடல்களைக் கொண்ட திருமந்திரத்தின் ஆழமான கருப்பொருளை, மெய்ப்பொருள் கண்கொண்டு, நுண்மான் நுழைப்புலனோடு, துலாக்கோல் போல் பகுத்துணர்ந்து, ஆங்கிலத்தில் தந்துள்ள இரண்டு பெருமக்களுமே திருமந்திரத்தில் மூழ்கித் திளைத்தவர்கள். திருமந்திரத் தத்துவம், சைவமும் திருமந்திரமும், திருமந்திரத்தில் யோகா, ஆன்மிக உடற்பயிற்சி, குருநிலை விளக்கம், உயர்நிலை விளக்கம், மாயை, கர்மா, ஆன்மா போன்ற பல்வேறு செய்திகளை ஆழமாய் சிந்தித்து, எல்லாருக்கும் புரியக்கூடிய நல்ல எளிய ஆங்கிலத்தில் திருமூலரது தத்துவத்தை தந்துள்ளது ஓர் அரிய முயற்சி. தமிழுக்கும், சைவத்திற்கும் இவர்கள் இன்னும் ஒரு படி கூடுதலாய் புகழ் சேர்த்திருக்கின்றனர். திருமடங்கள் செய்ய வேண்டிய பணி, இவர்கள் இருவரும் இணைந்து செய்திருப்பது நமக்குக் கிடைத்துள்ள பேறு. பையப் பைய எட்டயபுரத்துக் கவிஞனின் கனவு நனவாகத் தொடங்கியுள்ளது. படித்துணர வேண்டிய ஆய்வுக் கருவூலம்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us