கங்கை புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-33. (பக்கம்: 112).
மஞ்சள், மண் என எதையும் நம் இஷ்டத்திற்கு விநாயகராக உருவகப்படுத்தி, உளமாரத் துதித்திடும்போது நாம் வேண்டுவது அனைத்தையும் கொடுத்திடும் வள்ளல் பெருமாள் அவரே! எளியவராக காட்சி அளிப்பினும், அவரது கீர்த்தி, அருமை பெருமைகள் அளப்பரியது, உலகளாவியது. இந்த விளக்கத் தகவல்களுடன் விநாயகர் பெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்ட `காணாபத்யம்' என்ற சமயம், விநாயகர் புராணம், அவரது வழிபாட்டிற்குரிய விரதங்கள் 11 ஆகியவை இந்நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. முகப்பு அட்டையில் விநாயகப் பெருமானின் வசீகரத் தோற்றம் தாங்கியது இந்நூல்