ஸ்ரீ ஆனந்த நிலையம், 29/15, ரங்கநாதன் தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 184).
அனுமன், பலி, அசுவத்தாமன், வியாசர், விபீஷணன், கிருபன், பரசுராமன் ஆகியோர் சிரஞ்சீவிகள் ஆவர் (பக்.37). பிராம்பி, மகேஸ்வரி, கவுமாரி, வராகி, நாராயணீ, இந்திராணி, காளி ஆகிய ஏழு தெய்வங்களும் சப்த மாதாக்கள் என்று சொல்லப்படும் (பக். 42). வட பத்ர சயனம், வீரசயனம், தலசயனம், உத்தான சயனம், தர்ப்வ சயனம், புளுங்க சயனம், மோக சயனம், அனந்த சயனம் என எட்டு வகை சயனங்கள் (பக்.104). இப்படி ஆன்மிகம் பற்றிய பல தகவல்கள் இதில் தொகுக்கப் பட்டுள்ளன.