பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை-14. (பக்கம்: 231)
நாட்டின் முன்னேற்றத்தை 'கணிப்பொறி' நிர்ணயிக்கிறது. வீட்டின் முன்னேற்றத்தை `நவக்கிரகங்கள்' நிர்ணயிக்கின்றன!
நவக்கிரகத்தின் கோணங்களின்படியே ஒரு மனிதனுக்கு நல்லதும் கெட்டதும் வருகிறது என்ற நம்பிக்கை இன்று அசைக்க முடியாதது ஆகி விட்டது.நவக்கிரகங்கள் 9 என்ன என்ன? அவைகளின் பெயர்களான சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது, இவைகளின் ராசி, திக்கு, அதி
தேவதை, பிரத்யதிதேவதை, நிறம், வாகனம் இதற்கான கோயில்கள் பட்டியல் இவைகளை மிகவும் விவரமாகவும், எளிமையாகவும், ஆதாரத்துடனும் இந்நூல் விளக்குகிறது.
நவக்கிரக கோயில்களுக்குச் சென்று, நமது தோஷங்கள் நீங்கப் பரிகாரம் செய்யும் முறைகளும், அந்த கோயில் பற்றிய பல அரிய தகவல்களும் மிகவும் அக்கறையுடன் ஆராய்ந்து இந்த நூலில் எழுதப்பட்டுள்ளது.
இராமநாதபுரத்தில் ஒன்பது கற்களை ஒன்பது கிரகங்களாக நவபாஷாணம் என்று வணங்கும் தத்துவத்தையும், 27 நட்சத்திரங்கள், 12 ராசிகளுக்கு உரிய கோயில் விவரங்களும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இந்த நூல் உங்கள் கையில் இருந்தால், எந்த தோஷமும் உங்களுக்கு வராது. ஒரே ஒரு தோஷம், சந்தோஷம் மட்டுமே வரும்! புராணச் செய்திகள், தேவாரப் பாடல்கள், கோயில் படங்கள் ஆகியவற்றுடன், எழுத்துப்பிழை தோஷம் ஏதுமின்றி வந்துள்ள கருத்துப் புதையல் நூல்! நவக்கிரகங்களின் நல்ல ஜாதகங்களே இந்த நூலில் உள்ளதால், இதைப் படித்தால் நல்லதாகி விடும்.