வங்காளி மூலம்: மைக்கேல் மதுசூதன் தத்தா. வெளியீடு: தென்திசை பதிப்பகம், 52, தென்மேற்கு போக் ரோடு, தி.நகர், சென்னை-600 017. (பக்கம்: 88.)
வங்காளி கவிதை இலக்கியத்தில், ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்திய மைக்கேல் மதுசூதன் தத்தா ""வீராங்கனா'' என்ற தலைப்பில் இதிகாச புராணங்களில் இடம் பெறும் மகளிர் தங்கள் நாயகர்களுக்கு எழுதும் கற்பனைக் கடிதங்களாக அமைத்த கவிதைகளை சு.கிருஷ்ணமூர்த்தி தமிழ்க் கவிதைகளாக மொழிபெயர்த்துள்ளார்.
துஷ்யந்தனுக்கு சகுந்தலை, சந்திரனுக்குத் தாரை, துவாரகாநாதனுக்கு ருக்மணி, தசரதனுக்குக் கைகேயி, அர்ஜுனனுக்குத் திரவுபதி, துரியோதனனுக்குப் பானுமதி, ஜயத்திரதனுக்குத் துச்சளை, சந்தனுக்கு ஜாஹ்னவி, புரூரவசுக்கு ஊர்வசி, நீலத்துவளுனுக்கு ஜனா என 11 கவிதைக் கடிதங்கள் புதுமையாக வழங்கப் பட்டுள்ளன. வங்காள இலக்கிய முற்போக்குச் சிந்தனைக்கு இந்நூலும் ஒரு சான்றாகும்.