இலக்குமி புத்தகாலயம், 18/104, இரண்டாவது தெரு, வெங்கடேசா நகர், விருகம்பாக்கம், சென்னை-92. (பக்கம்: 384. விலை: ரூ.90).
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த அழகிய தமிழகத்தை இந்த வரலாற்று நாவலின் வழியே, நாம் நேரில் கண்டு மகிழ முடிகிறது.
காவியம் தீட்டும் கவிஞர் கோவி.மணிசேகரர், கவிதைத் தமிழின் இனிமையை இந்த வரலாற்றுப் புதினத்திலும் கலந்துள்ளார். பட்டுப் புடவையின் விலை உயர்ந்த தங்கச் சரிகை வேலைப் பாடாக சந்த நயம் அங்கங்கே ஜொலிக்கிறது. இதோ ஒரு துளி: `பூ மணக்கும், பூவையரின் புன்னகை மணக்கும், புலமையால் தமிழ் நாமணக்கும், காவியப் பாமணக்கும், மானுடப் பண்பு மணக்கும்" (பக்.4)
இந்த வரலாற்றுப் புதினத்தில் காதல் ரசமும் தமிழின் பண்பாட்டு வாசமும், புதுப்புது சிந்தனை
களும், படிப்பவர் மனதைப் பிடித்துக் கொள்கின்றன. இதோ சில:
தமிழ் மண்ணில் பிறக்கிற எந்த அந்நியனுக்கும் இலக்கிய ஞானம் இயல்பாய் அமையும் (பக்.44)
இச்சைக்குக் காப்புச் செய்யுளாக நிற்கும் மார்பகத்தின் கச்சையை அவிழ்க்கிறாள் (பக்.48).
உடன் பிறப்பவர்கள் பிறக்கும்போதே இதயத்தில் பொறாமையையும், நாவில் நஞ்சையும் வைத்துக் கொண்டுதான் பிறப்பார்களா? (பக்.127).
வீரர்கள் பொதுவாகவே காதல் விஷயங்களில் கோழைகள் (பக்.273).