குமரன் பதிப்பகம், 3, முத்துகிருஷ்ணன் தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 112. விலை: ரூ.30).
இதழ்களில் உலா வந்த 18 சிறுகதைகளை இந்த நூலில் காணலாம், திருச்செந்தூர் கடல் அலையின் அழகைப் போல இந்த சிறுகதைகள் ஒவ்வொரு செய்தியையும் வலைவீசிக் கொண்டு வருகிறது.
தியாகப் பரிசு என்ற முதல் கதையில் பேராசிரியர் சுந்தரம் காலேஜ் கடமைகளில் மூழ்கி கரைந்து போனவர். மனைவி ரஞ்சிதம் எவ்வளவோ சுந்தரத்தை வீட்டின் பக்கம் திருப்பியும் அவர் திரும்பவில்லை. அதனால் அவரின் மகளும் மகனும் திருமணத்தோடு ஓடிவிடுகின்றனர். ஆனால், அவரிடம் படித்த சீதாராமன் என்னும் மாணவனது மரியாதை ரஞ்சிதத்தையும், மாற்றி பேராசிரியரையும் பிரமிக்க வைக்கிறது. தற்கொலையை `மனதில் உறுதி' என்னும் கதை தடுத்து நிறுத்துகிறது.
`மனங்கள்' உணர்வுகளின் வெளிப்பாட்டையும், கிராமத்து மூட நம்பிக்கைகளை `பலியாடுகள்' என்ற கதை படம் பிடித்துக் காட்டுகிறது. வார இதழ்களில் வலம் வந்த ஜோரான கதைத் தொகுப்பு!