ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ், 106/4, ஜானி ஜான்கான் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 96. விலை: ரூ.25)
மலையாள இலக்கியத்தில் புகழ் பெற்ற தகழி சிவசங்கரப் பிள்ளை எழுதிய `பாப்பி அம்மாவும் பிள்ளைகளும்' என்னும் இச்சிறு நாவல் ஒரு பெண்ணை அதிலும் தாய்மையின் பெருமையை முழுமையாகச் சித்தரிக்கும் அடக்கமான படைப்பு, நல்ல குணவதியானவள் வசதி வாய்ப்புக்களால் தடுமாறவும், தடம் மாறவும் மாட்டாள் என்பதை விளக்கும் பவித்தரமான படைப்பு பாப்பி அம்மா. நெஞ்சை நெகிழ வைக்கும் இந்நாவல் மூலத்தைப் பிரதிபலிப்பதாய் வேறுபாடு காண முடியாதவாறு மொழியாக்கம் பெற்றுள்ளது.