மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை-108. (பக்கம்: 152. விலை: ரூ.40).
நாட்டில் நடக்கும் ஒவ்வொரு துறை ஊழல்களையும், அவற்றைத் தீர்க்கக்கூடிய உபாயங்களையும் மையமாக வைத்து ஆசிரியர் இந்நாவலை எளிய தமிழில் படைத்திருக்கிறார். `பூ மேல உங்களுக்குப் பிரியமில்லையா? உங்க நந்தியா வட்டம் பூத்துக் குலுங்குது நீங்க பறிச்சுட்டுப் போகக் கூடாதா? என்று கேள்வியும், அதற்கான பதிலும் ஆசிரியர் பொருத்தமான இடத்தில் சொல்லியிருக்கிறார். நாவல் படிக்க விரும்புவோர் இந்நாவலை அதன் உள்பொதிந்த கருத்துக்களை கண்டு இன்புறலாம்.