கிழக்கு பதிப்பகம், எண்.16, கற்பகாம்பாள் நகர், மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 216. விலை: ரூ.90)
இந்திரா பார்த்தசாரதியின் சிறந்த நாவல். எக்காலத்துக்குமான பிரதிநிதியாக கிருஷ்ணரை வைத்துப் பேசவும், விவாதிக்கவும் முடியும். கிருஷ்ணர், பவுராணிகர்களின் கைப்பிடிக்குள் இருந்தவரை, இந்தச் சாத்தியங்கள் வெளியிடப்படவில்லை. எப்போது, கிருஷ்ணரைப் படைப்பாளிகள் தத்தெடுத்தனரோ, அன்றைக்கு நிகழத் தொடங்கியது கிருஷ்ணரின் மறுபிறப்பு. இ.பா.,வின் இந்த நாவலில் உங்களுக்கு திரேதா யுகத்துக் கிருஷ்ணனும் தெரிவான்; 21ம் நூற்றாண்டுக் கிருஷ்ணனும் தெரிவான்!