நூலாசிரியர்: ச.கிருஷ்ணமூர்த்தி. கி.மான்விழி. வெளியீடு: மெய்யப்பன் பதிப்பகம், 53, புதுத் தெரு, சிதம்பரம். (பக்கம்: 232. விலை: ).
திருவாவடுதுறை ஆதீனம் சிவப்பிரகாச சுவாமிகள் வழங்கிய அருளாசியுடன் வெளிவந்துள்ள இந்நூல், பதிப்புத் துறையில் புகழ் மிக்க மெய்யப்பன் நூலக வெளியீடாக வந்துள்ளது. நல்லூர், காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள பாடல் பெற்ற தலமாகும். அமர்நீதி நாயனார் இத்திருத்தலத்தில் சிவத் தொண்டாற்றி வீடு பேறுற்றார். நல்லூர் கோவில் செப்புச் சிலைகளும், கல்வெட்டுகளும், கற்சிற்பங்களும் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாவன. சீர்மிக்க இவ்விருந்தைத் தம் எழுத்தாற்றலால் சிறப்பாக படைத்துள்ளனர் நூலாசிரியர்கள். திருக்குடந்தை, பாபநாசம் அல்லது திருவாரூரிலிருந்து நல்லூர் சென்றடையலாம்.