சிறுவாபுரி முருகன் அபிஷேகக்குழு, 52, முத்தையா முதலி இரண்டாவது தெரு, ராயப்பேட்டை. சென்னை.600 014. (பக்கம் 102)
இது திருப்புகழ் ஆய்வு நூல். அருணகிரிநாதரின் வண்ணத்தமிழைச் சுவைக்க விரும்புபவர்களுக்கு நல்ல நூல். சம்பந்தரை அருணகிரியார் புகழ்ந்து பரவிப் போற்றிக் கூறிய தொடர்களை பக்கம் 63ல் காணலாம். சம்பந்தர் மீது அருணாகிரியாருக்கு ஏன் அப்படி அபரிமித மரியாதை என்ற விளக்கம் ஆசிரியரால் சிறப்பாகத் தரப்பட்டிருக்கிறது. அதே போல சுந்தரரைப் புகழ்ந்த அருணகிரியார் திருநாவுக்கரசர் பற்றி ஒரு இடத்திலும் குறிப்பிடாதது ஏன் என்று கேட்கிறார் ஆசிரியர். ஆனால் அப்பர் பெருமானின் சகோதரி திலகவதியார் பற்றிய குறிப்பு இருக்கிறது. அதே போல `வள்ளி சன்மார்க்கம்' என்று திருப்புகழ் ஆசிரியர் கூறியதற்கான விளக்கமும் இந்த நூலில் உண்டு.ஆசிரியரின் திருப்புகழ் அபிமானமும் அதில் உள்ள தெளிவும் நூலிற்குச் சிறப்பு சேர்க்கின்றன.