தங்கத் தாமரை பதிப்பகம், 37, கால்வாய்க்கரை சாலை, கஸ்தூரிபா நகர், அடையாறு, சென்னை-20. இரண்டு பாகங்களும் சேர்த்து சலுகை.
பிரச்னை இல்லாத வீடு எது? மனிதன் ஏது? ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு பிரச்னை இருக்கத்தான் செய்கிறது. பிரச்னை ஏற்படும்போது, பெரும்பாலானவர்கள் சோர்ந்து, முடங்கி போவதை பார்த்திருக்கிறோம்.ஒரு சிலரால் தான் பிரச்னையை எதிர்நோக்கி, அதை தீர்த்து மீண்டு வருகின்றனர். பலரோ பிரச்னையை தீர்க்க தெரியாமல் அதை மேலும் சிக்கலாக்கிக் கொள்வர்.வேறு சிலரோ, பிரச்னை ஏற்பட்டவுடன் நன்கு ஆலோசனை தரக்கூடிய பெரியவர்களை அணுகி, பிரச்னையை தீர்த்து வாழ்க்கையை சீராக்கி கொள்கின்றனர். வாழ்க்கையில் பிரச்னை ஏற்படுவது சகஜம், அதைத் தீர்த்துக் கொண்டு வெற்றிநடை போட வேண்டும் என்ற நோக்கத்திற்காக பல்வேறு ஊடகங்களில் தனி பகுதி ஒதுக்கப்பட்டு, பிரச்னைகளுக்கு தீர்வு கூறப்படுகிறது. கவுன்சிலிங் என்ற பெயரில் பிரச்னைக்கு தீர்வு செய்யப்படுவதையும் பார்க்கிறோம்.இந்த இரண்டு பாகங்களிலும் உள்ள கட்டுரைகள் அனைத்தும், தினமலர்-வாரமலர் இதழில் வெளியாகிய தொகுப்பு. இதை படிப்பவர்கள், தங்களுக்கும் அதுபோன்ற பிரச்னைகள் இருந்தால், அனுராதா ரமணன் கூறிய வழிமுறைப்படி பிரச்னையை தீர்த்துக் கொள்ள இயலும்.