சாமி புக்ஸ், 20/48, ஆலந்தூர் ரோடு, சைதாப்பேட்டை, சென்னை-15. (பக்கம்: 304)
நதி மூலம் ரிஷிமூலம் அறிய வேண்டியதில்லை என்பர் பெரி யோர். ஆனால், மனிதன் இறைவனின் மூலத்தையே அறியவும், ஆராயவும் துடிக்கிறான். காலத்தைப் படைத்த கடவுளின் காலத்தையே ஆராய முயல்வது வேடிக்கை தான். எனினும் அத்தகு முயற்சிகளும் சுவாரஸ்யமான பல செய்திகளையே நமக்கு அளிக்கின்றன. அப்படி தர்ம சாஸ்தா என போற்றப்படும் ஐயப்ப னின் அருட் சரி தத்தை ஆராய்ந்து, பல அரி ய தகவல்களை நமக்கு வழங்கியுள்ள நூல் தான் இது. தத்வமஸி என்பது வேத வாக்கியம். இதற்கு நீயே தான் அது என்று பொருள் உரைப்பர்.
இந்த மகா வாக்கியம் தான் சபரி மலையில் உள்ள ஐயப்பன் தேவாலய முகப்பில் பொறிக்கப்பட்டுள்ளது. எல்லா உயிர்களிலும் இறைவனே இருக்கிறான் என்னும் தத்துவ நுட்பத்தை உரைக்கும் இச்சொல்லையே நூலின் தலைப்பாக்கி, ஐயப்பன் பற்றிய அத்தனை வரலாற்றுச் செய்திகளையும் நுணுகி ஆராய்ந்து தொகுத்துள்ளார் கவுதம நீலாம்பரன். சரி த்திர நவீனங்கள் பல எழுதியுள்ள அனுபவம் அவருக்கு நன்கு கைகொடுத்து உதவியுள்ளது.
ஐயப்பன் பற்றிய வரலாற்றுப் பார்வை, தத்துவ நோக்கு, புராணச் செய்திகள், ஐயப்பனுக்கும் புத்த மத ஒப்பீட்டுக்கும் உள்ள உண்மை விவரம், வாபரி ன் தோழமை, பக்தியின் சிறப்பு என பல்வேறு முனைகளிலும் ஆழ்ந்த பார்வையோடு அவர் செய்திகளைச் சேகரம் செய்துள்ளார். ஐயப்ப துதிப் பாடல்கள், வழிபாட்டு மந்திரங்களும் தொகுக்கப்பட்டுள்ளது. சிறப்பான பயன்பாட்டுக்கு உதவும் என்பதில் ஐயமில்லை. படிக்கவும் பாதுகாக்கவும் வேண்டிய நூல் இது.