'தமிழின் மிக முக்கியமான பன்னிரண்டு படைப்பாளிகளின் முழு ஆளுமையையும் வெளிப்படுத்தக்கூடிய விரிவான நேர்காணல்கள் அடங்கிய தொகுப்பு இது.
துடிப்புள்ள இளம் படைப்பாளி என்று அறியப்பட்ட காலத்தில் ஜெயமோகன் அளித்த முதல் பேட்டியிலிருந்து, மூத்த எழுத்தாளர் நகுலனின் பேட்டி வரை இதில் இடம்பெற்றுள்ளது.
பேட்டிகள், படைப்பாளிகளின் பல்வேறு பரிமாணங்களை வெளிக்கொண்டுவருவதோடு, சமூகத்தோடு அவர்களுக்குள்ள உறவை மிகத்துல்லியமாக வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருப்பது இத்தொகுப்பின் சிறப்பம்சம். அய்யனார் பல்வேறு சிற்றிதழ்களுக்காகவும் மின் இதழ்களுக்காகவும் கண்ட பேட்டிகள் இவை.
பவுத்த அய்யனார், தமது 'அலைபுரளும் வாழ்க்கை' கட்டுரை நூலின்மூலம் தமிழ் உலகுக்கு நன்கு பரிச்சயமானவர். சமீபத்தில் வெளியான இவரது 'மேன்ஷன் கவிதைகள்' பரவலான வரவேற்புப் பெற்றது. காலச்சுவடு மற்றும் உலகத்தமிழ் இணைய இதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர். தற்போது மதுரையில் 'மகாசேமம் அறக்கட்டளை' என்னும் பெண்களுக்கான தொண்டு நிறுவனத்தில் பதிப்புத்துறை மேலாளராகப் பணியாற்றுகிறார். வயது 42.