வாழ்க்கையில் எத்தனை எத்தனை விசித்திரங்கள்,விநோதங்கள், புதிர்கள்! விடைகளைத் தேடி நீண்டு கொண்டே செல்கிறது பயணம். இரு வேறு பாதைகள். இரு வேறுகோணங்கள். ஒன்று கனவு. இன்னொன்று யதார்த்தம். ஏதோ ஒரு புள்ளியில், இரண்டும் இணைந்து விடுகின்றன. ஒழுங்கு, முரண்பாடு எல்லாமே மனம் சிருஷ்டிக்கும் மாயத் தோற்றங்கள்தாம்.கனவு, யதார்த்தம், நகைச்சுவை -வாழ்க்கையை நகர்த்திச் செல்லும் இந்த மூன்றும், இ.பா.வின் இந்நாவலில் பிரிக்கமுடியாதபடி பிரமாதமாகப் பின்னிப் பிணைந்திருக்கின்றன.