வெளியீடு: பத்மா பதிப்பகம், 21, லோகநாதன் நகர், 2வது தெரு, சூளைமேடு, சென்னை-94. (பக்கம்: 312, விலை: ரூ.100)
ஒரு வரி, இரு வரி கவிதைகள், கல்லூரி கால நினைவுகள், மருத்துவக் கட்டுரைகள், வாழ்த்துரைகள் இப்படிப் பலவும் ஒருங்கிணைந்த கதம்ப நூல். "அனலாகத் தென்றல், தென்றலாக அனல்' என்னும் நூலின் தலைப்பு கவித்துவத்தோடு அமைந்துள்ளது சிறப்பு.
நூலாசிரியர் தாம் பெற்ற அனுபவங்களை, நிகழ்வுகளை, எண்ணங்களையெல்லாம் ஒன்று திரட்டி அச்சு வடிவம் கொடுத்துள்ளார். "அணிந் துரை' பற்றிய சிந்தனையில், "எழுதிய நூலுக்கு எல்லோரும் அணிந்துரை கேட்கிறார்கள் நானோ அணிந்துரைக்காக நூல் எழுதுகிறேன்' (பக்.79) என்று கூறும் ஆசிரியரின் 312 பக்க நூலில், 46 பக்கங்கள் அணிந்துரைக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. எழுச்சியூட்டும் பல சிந்தனைகள் நூலிடையே இழையோடிச் செல்கின்றன.