வெளியீடு: காளீஸ்வரி பதிப்பகம், 2, வடக்கு உஸ்மான் சாலை, முதல்மாடி, (கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில்), தி.நகர், சென்னை-17. (பக்கம்: 136, விலை: ரூ.40)
நமது நாட்டில் ஜவகர்லால் நேருவிற்குப் பிறகு குழந்தைகளைப் பெரிதும் கவர்ந்த தலைவர் நமது ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் தான் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. அவர், குழந்தைகளிடம் கொண்டிருந்த அன்பை அளவிட கருவிகளை எந்த விஞ்ஞானியும் உருவாக்கவில்லை.
கலாம், குழந்தைகளைச் சந்தித்துப் பேசி அளவளாவி மகிழ்வதோடு நின்று விடுவதில்லை. அவர்களுக்கு அதிகபூர்வமான பல கருத்துக்களையும், அறிவுரைகளையும் கூறி வருகிறார். அவை அவர்களுடைய கல்வியை மேம்படையச் செய்பவை. வாழ்க்கையை முன்னேற்ற உதவுபவை. இன்றைய குழந்தைகள் நாளைய குடிமக்கள். நாளைய குடிமக்கள் நன் மக்களாக இந்நூல் வழிகாட்டும்.